நாட்டு மக்கள் அனைவரும் நாட்டு நலனுக்காக இந்த புத்தாண்டில் ஒரு உறுதிமொழியை ஏற்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் முடிவடைவதற்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளன. உலக மக்கள் அனைவரும் புத்தாடை எதிர்பார்த்து ஆவலுடன் காத்துள்ளனர். ஒவ்வொரு வரும் 2021 ஆம் ஆண்டு புத்தாண்டில் தனிப்பட்ட உறுதிமொழிகள் உடன் சேர்த்து, நாட்டு நலனுக்காக ஒரு உறுதிமொழியை ஏற்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதாவது வெளிநாட்டு பொருட்களை புறந்தள்ளி விட்டு இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே பயன்படுத்துவது என்கிற உறுதி மொழி.
இவ்வாறு நாம் அனைவரும் முடிவெடுத்து விட்டால், நமக்காக வியர்வை சிந்தி உழைக்கும் இந்தியத் தொழிலாளர்கள் பயனடைவார்கள். இந்தியாவின் பொருளாதார சூழலும் உயரும் என்று அவர் கூறியுள்ளார். அதனால் வருகின்ற புத்தாண்டில் நாட்டு மக்கள் அனைவரும் இந்த உறுதிமொழியை ஏற்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.