கிளாஸ்கோவில் நடைபெறும் மாநாட்டிற்கு நடுவில் இந்திய பிரதமர் மோடி இத்தாலி பிரதமரை சந்தித்துள்ளார்.
ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கிளாஸ்கோவில் COP26 என்று அழைக்கப்படும் ஐ.நாவின் காலநிலை மாற்ற உச்சி மாநாடானது நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் உலகின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்த மாநாட்டிற்கு இடையே இந்திய பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இத்தாலி பிரதமர் நப்தாலி பென்னட்டை சந்தித்துள்ளார்.
அதிலும் இத்தாலி பிரதமர், மோடி அவர்களை கைகுலுக்கி வரவேற்றார். மேலும் இத்தாலி பிரதமர் கூறியதில் “நீங்கள் எங்கள் நாட்டில் மிகவும் பிரபலமானவர். எனவே எங்கள் கட்சியில் இணைந்து விடுங்கள்”என்று கூறியுள்ளார். இதனால் அங்கு சிறிது நேரம் சிரிப்பலை ஏற்பட்டது. குறிப்பாக பிரதமர் மோடி இத்தாலி பிரதமர் நப்தாலி பென்னட்டை சந்திப்பது இதுவே முதல் தடவையாகும்.