Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் புதிய கொரோனா… மத்திய அரசு உறுதி..!!

பிரிட்டனில் உருவான புதிய கொரோனா இந்தியாவில் நுழைந்து விட்டதாக மத்திய அரசு உறுதி செய்துள்ளது.

பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த கொரோனா முந்தையதைவிட 70% வேகமாக பரவக்கூடியது. பிரிட்டனில் இந்த வைரஸ் அதிகமாக பரவி வருவதால் அங்கு உள்ள நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளது. விமான போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து தமிழகத்துக்கு வந்த 13 பேருக்கு உறுதி செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பரிசோதனையில் 13 பேரின் மாதிரிகள் முடிவுக்கு அனுப்பப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது.

மேலும் மத்திய சுகாதாரத்துறை துணை அறிக்கை குறித்து ஆலோசனை நடத்தியது. பரிசோதனை முறையில் பிரிட்டனில் இருந்து வந்த நான்கு பேரின் மாதிரிகள் வித்தியாசம் உள்ளதாக புனே நிறுவனம் மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்தது. தொடர்ந்து இரண்டாவது பரிசோதனை செய்ய முடிவெடுத்துள்ளது. இரண்டாவது ஆய்வுக்கு உட்படுத்தபட்ட பின்னர் இது உருமாற்றம் அடைந்த கொரோனாவா இல்லையா என்று தெளிவாக கூறமுடியும் என மத்திய அரசு கூறியுள்ளது. தமிழகம் போன்ற அனைத்து மாநில மாதிரிகளை முடிவுகளை பெற்ற பிறகு நம் இந்தியாவில் பரவி உள்ளதா என்பது தெரியவரும்.

Categories

Tech |