இந்தியா – நியூசிலாந்து அணிள் விளையாடி வந்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.இதையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக நிக்கோல்சும் , மார்ட்டின் கப்திலும் களமிறங்கினர்.
தொடக்க முதலே இந்திய அணியின் பந்து வீச்சில் திணறிய மார்ட்டின் கப்தில் பும்ரா வீசிய 4-வது ஓவரில் 1 (14) ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு இறங்கிய வில்லியம்சன் – நிக்கோல்ஸ் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறிது நேரம் தாக்கு பிடித்த நிலையில் நிக்கோல்ஸ் 28 ரன்களில் ஜடேஜா பந்து வீச்சில் க்ளீன் போல்டானார்.
இதையடுத்து அனுபவ வீரர் ராஸ் டெய்லர் – வில்லியம்சன் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. இந்த ஜோடியை இந்திய அணியால் பிரிக்க முடியவில்லை. சிறப்பாக ஆடிய வில்லியம்சன் அரைசதம் அடித்தார். அதன் பிறகு வில்லியம்சன் 67 ரன்களில் சஹால் பந்து வீச்சில் ஜடேஜா வசம் பிடிபட்டார்.
அதை தொடர்ந்து இறங்கிய நீஷம் 12, கோலின் டி கிராண்ட் ஹோம் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருப்பினும் டெய்லர் ஒரு புறம் நிலைத்து ஆடி அரை சதம் அடித்தார். நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட் இழந்து 211 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. டெய்லர் 67 ரன்களுடனும், டாம் லேதம் 3 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்