இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட், முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நாளை நடைபெறுகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்து சென்றுள்ளது. அங்கு 5, 20 ஓவர் போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நாளை நடைபெறுகிறது. இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 12.20 மணிக்கு தொடங்கும் போட்டிக்காக, இரு அணி வீரர்களும் பயிற்சி மேற்கொண்டு ஆயத்தமாகி வருகின்றனர்.
இந்திய அணியில் தொடக்க வீரர் சிகர்தவான் காயமடைந்து இருப்பதால் இருப்பதால், அவருக்கு பதிலாக இளம் வீரர்கள் ப்ரித்விஷா அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி செயல்பாடு எப்படி இருக்கும், என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.