Categories
பேட்மிண்டன் விளையாட்டு

இந்திய ஓபன் பேட்மிண்டன்: கொரோனா எதிரொலி …. இங்கிலாந்து அணி விலகல் ….!!!

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி நாளை முதல் தொடங்கி 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி நாளை முதல் (11-ம் தேதி) தொடங்கி 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் ரசிகர்கள் இன்றி போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இப்போட்டியில் பி.வி.சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த், லக்‌ஷயா சென்,  லோ கியான்  உட்பட முன்னணி நட்சத்திர வீரர் ,வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் உலக பேட்மிண்டன் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர் சாய் பிரனீத்துக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் அவர் இப்போட்டியில் இருந்து விளங்கியுள்ளார்.

இதைத்தொடர்ந்து இத்தொடரில் பங்கேற்க இருந்த இங்கிலாந்து இங்கிலாந்து இரட்டையர் பிரிவு வீரர் சியான் வென்டி மற்றும் அவருடைய பயிற்சியாளர் இருவருக்கும் கொரோனா தொற்று  பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக ஒட்டுமொத்த இங்கிலாந்து அணியும் இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இருந்து விலகி இருப்பதாக இந்திய பேட்மிண்டன் சம்மேளனம் தெரிவித்துள்ளது

Categories

Tech |