இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.இத்தொடரில் பி.வி சிந்து,சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் உட்பட முன்னணி வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் இன்று 2-வது சுற்று போட்டி தொடங்க இருந்தது. ஆனால் இந்திய அணி வீரர்கள் கிடம்பி ஸ்ரீகாந்த், குஷி குப்தா, ரித்திகா ராகுல், தெரசா ஜாலி, மிதுன் மஞ்சுநாத், சிம்ரன் அமன் சிங், அஸ்வினி பொன்னப்பா, ஆகியோர்க்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதனால் 7 வீரர்களும் இத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.இவர்கள் தொடரிலிருந்து விலகியதால் இவர்களுக்கு எதிராக போட்டியிட இருந்த அனைத்து வீரர்களும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து இங்கிலாந்து அணியில் இரண்டு வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இங்கிலாந்து பேட்மிண்டன் அணி தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.