இந்தியன் ஓபன் பேட்மிண்டன் போட்டி நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
இந்தியன் ஓபன் பேட்மிண்டன் போட்டி கே.டி. ஜாதவ் இன்டோர் ஹாலில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து-சாலிஹா ஆகியோர் மோதினர்.இதில் 21-7, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதையடுத்து நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடந்த போட்டியில் எஸ்.பிரணாய்-லக்ஷ்யா சென் மோதினர். இதில் 14-21 21-9 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற லக்ஷ்யா சென் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.