இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில் சாலிஹா, காஷ்யப் , பி.வி சிந்து ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள கே.டி. ஜாதவ் இன்டோர் ஹாலில் நடைபெற்று வருகிறது .இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் சாய்னா-மாளவிகா பன்சோட் ஆகியோர் மோதினர் .இதில் 21-17, 21-9 என்ற செட் கணக்கில் சாய்னாவை வீழ்த்தி வெற்றி பெற்ற மாளவிகா பன்சோட் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இதை தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் ஹோயாக்சை 21-17, 21-14 என்ற கணக்கில் தோற்கடித்து வெற்றி பெற்ற சாலிஹா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதைத்தொடர்ந்து பி.வி சிந்து, ஆகர்ஷி காஷ்யப் ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.