Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பில் சீனாவை மிஞ்சிய இந்தியா…..! உலகளவில் 11ஆவது இடத்தில் நீடிக்கிறது …!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சீனாவை மிஞ்சி உள்ளதால் நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

கண்ணுக்குத்தெரியாத கொடிய வைரஸ் உலக நாடுகளையே தும்சம் செய்துவருகிறது . சீனாவின் வுகாண் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, 46 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது, உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டிபிடிக்கப்படாததால் சமூக விலகல் ஒன்றே தீர்வு என்பதை உணர்ந்து உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, அதை கட்டுப்படுத்தும் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனாவின் தாக்கம் கடந்த 2 மாதங்களாகவே இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்தியாவில் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளையோடு முடிவடைய இருக்கும் ஊரடங்கு மூன்று கட்டங்களாக அமுல்படுத்தப்பட்டது. 4ஆவது ஊரடங்கும் இருக்கும் என மத்திய அரசு கூறியுள்ள நிலையில் இந்தியாவில் தினமும் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

நேற்று மட்டும் 3736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85,768 ஆக அதிகரித்துள்ளது. 30 ஆயிரத்து 258 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 2753 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு சீனாவை மிஞ்சியுள்ளது.சீனாவில் 82 ஆயிரத்து 933 பேர் பாதிக்கப்பட்டு 4,633 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 11ஆவது இடம் பெற்றுள்ளது.

Categories

Tech |