உலகளவில் நேற்று ஒரே நாளில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமானது நாட்டு மக்கள் பலரை அதிர்ச்சியடையவைத்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. உலக வல்லரசு நாடான அமெரிக்காவை கொரோனா சின்னாபின்னமாக்கியுள்ளது. அதேபோல ஐரோப்பிய நாடுகளையும் கொரோனா விட்டுவைக்கவில்லை, தடம் தெரியாமல் ஆக்கியுள்ளது. ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, போன்ற ஐரோப்பிய நாடுகள் கடும் விளைவுகளை சந்தித்துள்ளன. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது.
இதனிடையே உலகில் அதிக மக்கள் தொகையை கொண்ட இந்தியா கொரோனா வைரசை எப்படி கட்டுப்படுத்தும் என்ற ஒரு கேள்வி உலக நாடுகள் மத்தியில் இருந்த நிலையில் இந்தியா சாமர்த்தியமாக கொரோனாவை கையாண்டு வந்தது. முன்னதாகவே இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கொரோனா பாதிப்பும், உயிரிழப்புகளும் கட்டுக்குள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
கடந்த சில நாட்களாக கொரோனாவின் மையங்களாக திகழ்ந்த இத்தாலி, ஸ்பெயின், UK, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்திக் கொண்டு வருகின்றன. அதே வேளையில் இந்தியாவில் கொரோனாவின் வீரிம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது வரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 37,336ஆக உயர்ந்துள்ளது. இதில் 9951 பேர் குணமடைந்துள்ள நிலையில் 1,218 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 2,394 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது உலகளவில் 7ஆவது இடமாகும். நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் 36,007 பேரும், ரஷ்யாவில் 7,933 பேரும், பிரேசிலில் 6,729 பேரும், பிரிட்டனில்6,201 பெரும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல இத்தாலி (1,965), ஜெர்மனி (1,068) ஆகிய இந்தியாவை விட குறைவான பாதிப்பை பெற்றுள்ளது. இது நாட்டு மக்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது.