Categories
உலக செய்திகள்

இந்தியா-பாகிஸ்தான் மோதல்… உண்மையை உளறிய பாகிஸ்தான் அமைச்சர்…

இந்தியா மீது அணு ஆயுதத் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தப் போவதாக மத்திய அமைச்சர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை எழுப்பியுள்ளார்.

காஷ்மீர் பிரச்சனையில் சுதந்திரம் பெற்ற நாள் முதல் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் கடும் மோதல் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து சிறப்பு அந்தஸ்துகளையும், 370 பிரிவையும் மத்திய அரசு நீக்கியுள்ளது. அதுமட்டுமன்றி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது மத்திய அரசின் இந்த நடவடிக்கை, காஷ்மீர் விவகாரத்தை வைத்து தங்களின் மக்களிடம் அரசியல் செய்து வந்த பாகிஸ்தான் அரசுக்கு மிகப்பெரிய அடியாக விழுந்திருக்கிறது.

அதனால் மிகவும் ஆத்திரமடைந்த பாகிஸ்தான், சர்வதேச அமைப்புகளில் இந்தியாவுக்கு எதிராக பேசிக்கொண்டிருக்கிறது. இருந்தாலும் காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகளிடையே பாகிஸ்தானுக்கு எந்த ஒரு வரவேற்பும் இல்லாத நிலையில், இந்தியா மீது அணு ஆயுதத் தாக்குதலை நடத்த போவதாக அந்நாட்டு அரசியல் தலைவர்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றனர். இதுபற்றி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடந்த ஆண்டு பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசியிருக்கிறார். இந்த நிலையில் இந்தியா மீது அணு ஆயுதத் தாக்குதலை கட்டாயம் நடத்துவோம் என்று அந்நாட்டின் மத்திய அமைச்சர் ஷேக் ரஷித் கூறியுள்ளார்.

இதுபற்றி பாகிஸ்தான் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, ” இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால், வழக்கமான போரில் வெற்றி பெறுவதற்கு எந்த ஒரு வாய்ப்பும் கிடையாது. இருந்தாலும் எங்களால் நடத்தப்படும் யுத்தம் ஒரு ரத்தக்களறி மற்றும் அணுசக்தி யுத்தமாக கட்டாயம் இருக்கும். அதுமட்டுமன்றி பயங்கரமான ஆயுதங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம். எங்களின் ஆயுதங்கள் அனைத்தும் இஸ்லாமியர்களை காப்பாற்ற உதவும். மேலும் பாகிஸ்தானின் தாக்குதலில் தற்போது அசாமையும் உள்ளடக்கி இருக்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |