தென்னாப்பிரிக்காவில் உள்ள ஆடுகளத்தை இந்திய பந்துவீச்சாளர் ஒருவரால் சாதகமாக பயன்படுத்த கொள்ள முடியும் என தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியின் கேப்டன் டீன் எல்கர் கூறியுள்ளார்.
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது .இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ஆம் தேதி தொடங்குகிறது .இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் .
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் டீன் எல்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது,” இந்திய அணி திறமையான வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. அதோடு தென்னாப்பிரிக்காவில் உள்ள ஆடுகளம் மற்றும் இந்திய சீதோஷ்ண நிலையை இந்திய பந்துவீச்சாளர் ஒருவரால் நேர்த்தியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றால் அது நிச்சயம் பும்ராவாகத் தான் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.