Categories
உலக செய்திகள்

இதை பண்ணியிருந்தால்…. தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள்…. பிரிட்டன் அரசின் அறிவிப்பு….!!

இந்தியாவில் இருந்து வரும் முழுமையாக தடுப்பூசி செலுத்திய பயணிகள் இனிமேல்  10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என்று பிரிட்டன் அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிரிட்டன் அரசாங்கம், இந்திய பயணிகளை தனிமைப்படுத்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதேபோல் பிரிட்டனிலிருந்து வரும் மக்கள் அக்டோபர்  4 ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் தனிமைப்படுத்தப் படுவார்கள் என்று இந்திய அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்தியாவின் இம்முடிவிற்கு பதிலளிக்கும் விதமாக பிரிட்டன் அரசானது covid-19 தடுப்பூசி சான்றிதழை அங்கீகரிக்கும் விதமாக இந்தியாவுடன் தொடர்ந்து பணியாற்ற உள்ளதாக அறிவித்துள்ளது.

இதனை அடுத்து பிரிட்டனின் உயர் ஆணையர் அலெக்சாண்டர் எல்லீஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அக்டோபர் 11ஆம் தேதி காலை 4 மணி முதல் பிரிட்டனுக்கு வரும் கோவிஷீல்டு அல்லது பிரிட்டனின் அங்கீகரிக்கப்பட்ட வேறு எந்தத் தடுப்பூசி போடப்பட்ட இந்தியர்கள் தனிமை படுத்த மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |