இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கூட்டு கடற்படைபயிற்சியை மேற்கொள்கிறது.
இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் அதனைக் கட்டுப் படுத்துவதற்காக இந்தியப் பெருங்கடலின் கிழக்கிலுள்ள பிரான்ஸ் நாட்டு கடற்படையுடன் குவாட் உறுப்பு நாடுகளாக திகழும் அமெரிக்கா ஜப்பான் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் இந்தியா கடந்த சில ஆண்டுகளாக கடற்படை கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த பன்னாட்டு கூட்டு கடற்படை பயிற்சியால் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சீனாவின் தலைநகரான பீஜிங்கில் பத்திரிகையாளர்களை சந்தித்த வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியானிடம் இந்த கடற்படை கூட்டுப் பயிற்சி பற்றி கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு அவர் “நாடுகளுக்கு இடையேயான ராணுவ ஒத்துழைப்பு பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஆக மட்டுமே இருக்க வேண்டும் என்று நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.