இந்தியாவின் தயாரிக்கப்பட்ட புதிய தலைமுறை நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணையான ‘அக்னி பிரைம்’ ஒடிசா கடற்கரையில் இருந்து இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை இன்று காலை 9:45 மணிக்கு ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இந்தத் திட-எரிபொருள் ஏவுகணைக்கான அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏவுகணையின் பாதை பல்வேறு புள்ளிகளில் நிலைநிறுத்தப்பட்ட ரேடார்கள் மற்றும் டெலிமெரிட் கருவிகள் மூலம் துல்லியமாக கணக்கிடப்பட்டது என்றும் ஏவுகணை தாக்கும் எல்லை 1,000 கிலோ மீட்டர் முதல் 2000 கிலோமீட்டர் வரை இருக்கும் என்று தெரிவித்துள்ளது.