Categories
தேசிய செய்திகள்

இப்படியே போனால் அவளவுதான்…. பசியால் வாடும் நாடுகளில் இந்தியா முதலிடம்..!!

தெற்காசியாவில் அதிக பசி, வறுமையால் வாடும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.

உலகளாவிய பசி குறியீட்டுப் பட்டியலில் (Global Hunger Index) வறுமை அடிப்படையில் இந்தியா 102-ஆவது இடம் வகிக்கிறது. உலகில் வாழும் ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் வாழ்கின்ற நிலையில், தெற்காசிய நாடுகளில் அதிக பசி, வறுமையால் வாடுவதில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

Image result for poverty in india

வறுமை நிலையில், பாகிஸ்தான், நேபால், இலங்கை போன்ற அண்டை நாடுகளை விட இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து 2010இல் உதயமான பிரிக்ஸ் (BRICS) எனப்படும், ஐந்து வளரும் நாடுகளின் சர்வதேசக் கூட்டமைப்பில் கடந்த சில வருடங்களாக இந்தியா பின் தங்கியுள்ளது என்பது, இந்திய பொருளாதார மந்தநிலையைக் குறிக்கிறது.

Image result for poverty in india

ஐந்து வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளில், 20 விழுக்காடு குழந்தைகள் எடை குறைவோடு காணப்படுகிறார்கள் என்றும், 37 விழுக்காடு குழைந்தைகள் போதுமான வளர்ச்சி இல்லாமல் வாழ்கின்றனர் என்றும் உலகளாவிய பசி குறியீட்டுப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த இந்தியாவில் 33 கோடி மக்கள் பசியால் வாடும் நிலையில், போதுமான சேமிப்பு வசதியில்லாததால் ஆண்டிற்கு ஒரு கோடியே 69 லட்சம் டன் உணவு தானியங்கள் வீணாவதாக இந்திய உணவுக்கழகம் தெரிவிக்கிறது.

இந்தியாவில் வறுமையும் பசியும் தொடர்கதையாய் இருப்பதற்கு மூலகாரணம் திட்டமிட்ட பகிர்வு இல்லாமை, பகிர்வில் குளறுபடிகள் மற்றும் பிரச்னையின் வீரியத்தைப் புரிந்துகொண்டு அதைத் தீர்த்திட முன்வராததேயாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழல் நீடித்துக் கொண்டே சென்றால் இந்தியாவின் வறுமை நிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |