கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இத்தாலி மோட்டார்பைக் நிறுவனமான டுகாட்டி தனது டியாவெல் 1260 மோட்டார் பைக்யை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய டுகாட்டி டியாவெல்யை ஆகஸ்ட் 9-ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது. இந்த புதிய மாடலில் உள்ள 1,262 சிசி எஞ்சின் 159 பி.எஸ். திறன் உடையதாகவும் 128.8 nm டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது.
சாலையின் தன்மைக்கேற்ப செயல்படும் விதமாக ஸ்போர்ட், டூரிங், அர்பன் என மூன்று டிரைவிங் மோட்களையும், இதனுடன் டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் ஏ.பி.எஸ். வசதியும், மேலும் அட்ஜஸ்ட் செய்யும் வகையில் முன்பக்கம் 50mm போர்க்கும் பின்பக்கம் மோனோஷாக் அப்சார்பர் போன்றவைகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் இந்த பைக்கின் விலையானது ரூ.17.50 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.