பிரிட்டன் அரசு, இந்தியா உள்பட நான்கு நாடுகளை சிவப்பு பயண பட்டியலிலிருந்து நீக்குவதாக தெரிவித்துள்ளது.
பிரிட்டன் அரசு, இந்தியா, கத்தார், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளை சிவப்பு பயண பட்டியலில் வைத்திருந்தது. இந்நிலையில், இந்த நாடுகளை அம்பர் பட்டியலுக்கு மாற்றுவதாக தெரிவித்துள்ளது. வரும், 8- ஆம் தேதியிலிருந்து இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
எனவே இந்தியா உட்பட குறிப்பிட்ட இந்த நான்கு நாடுகளை சேர்ந்த பயணிகள் பிரிட்டன் சென்றால், இனிமேல் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதற்கு மாற்றாக இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழும், பயணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சான்றிதழும் சமர்பிக்க வேண்டும்.
மேலும், பிரிட்டனுக்குள் சென்ற பின்பு, இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தாத மக்கள் மட்டும் 10 தினங்களுக்கு அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு, பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.