ஆப்கானிஸ்தான் காபூலில் இருந்து 107 இந்தியர்கள் உட்பட மேலும் 168 பேரை இந்தியா மீட்டுள்ளது..
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்ட நிலையில், தலிபான்களின் ஆட்சிக்கு பயந்து போய் அந்நாட்டில் வாழ பிடிக்காமல் ஆப்கான் மக்கள் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு விமானம் மூலம் தப்பி செல்கின்றனர்.. ஆப்கானில் சிக்கியிருக்கும் தங்களது தூதரக அதிகாரிகளை சர்வதேச நாடுகள் விமானம் மூலம் மீட்டு வருகின்றனர்..
அதேபோல 3 கட்டங்களாக இந்திய தூதரக அதிகாரிகள் 335 பேர் மீட்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனர்.. இதற்கிடையே தலிபான்கள் 150 இந்தியர்களை கடத்தி விட்டதாக தகவல் வெளியானது.. இந்த தகவல் உண்மையில்லை, நாங்கள் யாரையும் கடத்தவில்லை என தலிபான்கள் கூறினர்.. மத்திய அரசும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள், அவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் காபூலில் இருந்து 107 இந்தியர்கள் உட்பட மேலும் 168 பேரை இந்தியா மீட்டுள்ளது.. 168 பேருடன் புறப்பட்ட இந்திய விமானப்படை விமானம் உ.பியின் காசியாபாத்தில் தரை இறங்குகிறது..