Categories
தேசிய செய்திகள்

இந்திய ரூபாய் நோட்டுகளில் பிரதமர் மோடி படம்….. பாஜக எம்எல்ஏ கதம் அதிரடி டுவிட் பதிவு…..!!!

இந்தியாவில் புதிதாக வெளியிடப்படும் நோட்டுகளில் கடவுள் படங்கள் இடம்பெற வேண்டும் என்று டெல்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்ம கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தெரிவித்தார். இது குறித்து அவர் பிரதமர் மோடிக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், இந்தியாவில் புதிதாக வெளியிடப்படும் கரன்சி நோட்டுகளில் கடவுளான லட்சுமி மற்றும் விநாயகர் உருவங்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என மத்திய அரசையும் பிரதமர் மோடியும் கேட்டுக்கொள்கிறேன். புதிதாக வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளின் ஒருபுற மகாத்மா காந்தி உருவமும் மற்றொரு புற பெண் கடவுள் லட்சுமி மற்றும் விநாயகர் படங்கள் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் மராட்டிய பாஜக எம்எல்ஏ ராம் கதம் என்பவர் ரூபாய் நோட்டுகளில் பிரதமர் மோடியின் படமும் இடம்பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன்படி பிரதமர் மோடியின் படம் அச்சிடப்பட்ட ரூ.500 நோட்டுகளை போட்டோஷாப் மார்பிங் செய்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அத்துடன் “பிரதமர் மோடியின் மாவீரர் தியாகம் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை நாம் எப்படி புறக்கணிக்க முடியும்?. அவர் உலகம் முழுவதும் நாட்டை பெருமைப்படுத்துகிறார். மேலும் இந்தியாவில் மேன்மை அடையச் செய்ய மோடியின் முயற்சி இந்தியா மட்டுமின்றி உலகம் நினைவு கூரும்” என்று பதிவிட்டுள்ளார்.

 

Categories

Tech |