இந்திய நாட்டிற்கு ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பு கிடைத்திருப்பது வரலாற்று சிறப்புமிக்கது என ஐக்கிய நாடுகளின் இந்தியாவிற்கான தூதர் கூறியிருக்கிறார்.
இந்தியா ஜி-20 நாடுகளின் தலைவராக சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது மாதந்தோறும் ஒரு நாடு ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பில் அமரும். அதன்படி இம்மாதம் இந்தியாவிற்கு தலைமை பொறுப்பு கிடைத்திருக்கிறது.
இதனை தொடர்ந்து ஜி 20 மாநாடுகளின் அனைத்து நிகழ்வுகளும் இந்தியா முழுக்க இருக்கும் மாநிலங்களின் தலைநகரங்கள் மற்றும் சிறப்பு வாய்ந்த சுற்றுலா நகரில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
அந்த மாநாடுகளில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஐநா சபையில் இந்திய நாட்டிற்கான நிரந்தர தூதர் இது பற்றி தெரிவித்ததாவது, இந்தியா, உலக அளவில் அனைவரின் நல் வாழ்விற்காக தீர்வுகளை காண்பதில் முக்கிய பங்களிக்கிறது. இந்த சமயத்தில் ஜி 20 நாடுகளின் தலைமை பொறுப்பு இந்தியாவிற்கு கிடைத்திருப்பது வரலாற்று சிறப்புமிக்கது என்று தெரிவித்திருக்கிறார்.