பாஜகவின் 40வது தொடக்க தினவிழாவை முன்னிட்டு கட்சி தொண்டர்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் கொரோனாவால் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளே பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனாவுக்கு எதிராக இந்தியா, சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்துள்ள இந்தியா அதனை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கொரோனா பரவலை தடுப்பதில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக திகழ்கிறது என கூறிய பிரதமர் மோடி, கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியருக்கு நன்றி கூறுங்கள் என வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா குறித்த விழிப்புணர்வு கட்சி தொண்டர்களிடம் இருக்க வேண்டும் என்றும் ஏழை எளிய மக்களுக்கு பா.ஜ.க. தொண்டர்கள் உதவுமாறும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நாம் உரிய நேரத்தில் எடுத்துள்ளோம், கொரோனா தொற்றை எதிர்த்து போராடுவதில் அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு அரவணைத்து செல்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜி-20 மாநாட்டிலும் கொரோனா எதிர்ப்பில் இந்தியா முன்னோடியாக திகழ்ந்தது என மோடி தகவல் அளித்துள்ளார்.