பாகிஸ்தான் தரப்பில் காஷ்மீர் பிரச்சனை பேசப்பட்டதற்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறது.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் நடந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் தரப்பில் ஜம்மு காஷ்மீர் பிரச்சனை கொண்டுவரப்பட்டது. அதாவது ஐ.நாவுக்கான பாகிஸ்தான் நாட்டின் பிரதிநிதியாக இருக்கும் ஆமீர்கான், இஸ்லாமியர்கள் காஷ்மீரில் அதிகமாக வாழ்கிறார்கள்.
ஆனால், அதனை இந்துக்கள் அதிகமாக வாழும் இடமாக மாற்றுவதற்கு முயற்சிகள் நடக்கிறது. இதற்காகத்தான் காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது என்றார். ஐ.நா விற்கான இந்திய தூதரக குழுவின் சட்ட ஆலோசகராக இருக்கும் டாக்டர் காஜல் பட்டு, இது பற்றி தெரிவித்ததாவது, 50 வருடங்களுக்கு முன் தற்போது வங்கதேசமாக இருக்கும் பாகிஸ்தானின் கிழக்கு பகுதியில் தங்கள் மக்கள் என்று கூட கருதாமல் இனப்படுகொலை செய்த அவமான சரித்திரத்தின் எடுத்துக்காட்டாக பாகிஸ்தான் இருக்கிறது.
அங்கு பெண்கள் ஆயிரக்கணக்கில் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த கொடூர செயலுக்கு பாகிஸ்தான் பொறுப்பேற்கவோ வருத்தம் தெரிவிக்கவோ இல்லை. குழந்தைகள், பெண்கள் கல்வியாளர்கள் போன்ற பல பேர் போரில் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டனர்.
அந்நாட்டில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் சிறுபான்மையினராக இருப்பதால் தாக்கப்படுகிறார்கள். அதனை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். லடாக்கும், ஜம்மு காஷ்மீரும் இந்திய நாட்டின் பிரிக்க முடியாத அங்கங்கள். அதில் காஷ்மீர் பகுதியும் இருக்கும். இதற்கு யாராலும் மறுப்பு தெரிவிக்க முடியாது.
ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான், ஐ.நாவில் பொய்யாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது. இது கண்டிக்கக் கூடியது என்று கூறியிருக்கிறார்.