Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா – தென் ஆப்பிரிக்கா முதல் போட்டி இரத்து- மழையால் ரசிகர்கள் ஏமாற்றம்….!!

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

20 ஓவர் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் விளையாட இருக்கின்றது. இரு அணிகளும் மோதும் முதல் போட்டி  இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாசஸ்தலமான தர்மசாலாவில்  இன்று இரவு 7 மணிக்கு நடைபெற இருந்தது. ஏற்கனவே மழை பெய்யும் என்று அறிவிப்பு கொடுக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து இடைவிடாது கொட்டிய மழையால் ஆட்டத்தை தொடரவே முடியாத நிலை ஏற்பட்டத்தையடுத்து போட்டி கைவிடப்பட்டது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான  2-வது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி வருகின்ற 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

Categories

Tech |