இந்தியாவிலிருந்து ஜெர்மனிக்கு ஆர்கானிக் தரச்சான்றிதழ் பெற்ற உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவிலிருந்து ஜெர்மனிக்கு உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதற்கு காரணம் என்னவென்றால், பெங்களூருவில் மருத்துவ மற்றும் வாசனைப் பொருட்களாக பயன்படுத்தப்படும் தாவரங்கள், பலாப்பழம், மாம்பழக்கூழ், வாசனை திரவியங்கள், தேங்காய், காபி ஆகிய பொருட்கள் ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்படுகிறது.
அதனால்தான் 10.2 மெட்ரிக் டன் எடையுள்ள ஆர்கானிக் தரச்சான்றிதழ் பெற்ற க்ளூட்டன் அற்ற பலாப்பழ சுளைகள் மற்றும் பலாப்பழ பவுடர் இந்தியாவிலுள்ள பெங்களூருவிலிருந்து ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதேபோல் இந்தியாவின் திரிபுராவிலிருந்தும் லண்டனுக்கு 1.2 மெட்ரிக் டன் பிரஷ்ஷான பலாப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்