Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய டி20 அணியின் கேப்டன் இவரா ….? வெளியான முக்கிய தகவல் …..!!!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் படுதோல்வி அடைந்துள்ளது. இதனால் இந்திய அணிக்கு அரையிறுதிக்காண வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதனிடையே நடப்பு டி20 உலக கோப்பை தொடருக்கு பிறகு கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலக இருப்பதாக முன்பே தெரிவித்துள்ளார் .இதனால் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக யார்  நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது .அதன்படி இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகின்றது.

இந்நிலையில் இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறும்போது,” மூத்த வீரர்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது.அதோடு இந்திய டி20 அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக  பொறுப்பேற்பது  கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது “இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் .ஏற்கனவே  ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்பட்டு வருவதால் அவருக்கு கேப்டன்சிக்கான அனுபவம் உள்ளது .இதனிடையே இந்த மாதம் நடைபெற உள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |