பாகிஸ்தானின் கர்டார்பூர் பெருவழி மூடப்பட்ட்து தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவாரத்தை நடத்தி வருகின்றது.
பாகிஸ்தான் நாட்டில் அமைந்துள்ள சாஹிப் குருத்வாரா-வில் சீக்கிய மக்கள் யாத்திரை மேற்கொண்டு இறைவனை வழிபடுவது வழக்கம். இந்தியா பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கு 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இங்கு செல்வதற்கான கர்டார்பூர் பெருவழியை பாகிஸ்தான் நாடு மூடி விட்டது. இது தொடர்பாக கடந்த பா.ஜ.க. ஆட்சியில் இருந்த வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பாகிஸ்தானுடன் பேச்சுவாரத்தை நடத்தியும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
மேலும் இந்தியா சார்பில் பாகிஸ்தானிடம் , இரு நாடுகளுக்குமிடையே மத தலங்களுக்கு செல்வதற்கான விதிகளுக்குள் சீக்கிய புனித தலத்தினை சேர்க்கும்படி தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பாகிஸ்தானிலுள்ள வாகா எல்லையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு அதிகாரிகள் கொண்ட குழு பேச்சுவார்த்தியில் ஈடுபாட்டு வருகின்றனர். இதனால் இந்திய அதிகாரிகள் வாகா எல்லையை அடைந்துள்ளனர்.