டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் படுதோல்வியடைந்தது. குறிப்பாக இந்திய அணி பந்து வீச்சாளர்கள் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை .அதோடு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே செயல்பட்டு வருகிறார் .அவர் இன்னும் பந்துவீச தயாராகாததால் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை .அதோடு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது அவருக்குதோள்பட்டையில் காயம் ஏற்பட்டது .அதன் பிறகு அவர் உடல் தகுதியுடன் இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டது .தற்போது ஹர்திக் பாண்டியா பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் .இதில் ஹர்திக் பாண்டியா தேர்வால் அணியில் 6-வது பவுலரை சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .
இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் அணியில் இஷான் கிஷனை சேர்க்க வேண்டுமென முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,”தற்போது இஷான் கிஷன் சிறப்பான பார்மில் இருக்கிறார். எனவே நான் நிச்சயமாக ஹர்திக் பாண்டியாவிற்கு முன்பாக இஷான் கிஷனை அணியில் சேர்க்க பரிசீலிப்பேன் .அதேபோல் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூரை அணியில் சேர்க்கலாம். அதேசமயம் அணியில் அதிக மாற்றங்களை கொண்டு வந்தால் அணி பீதியடைந்து இருப்பதாக காட்டும். இதனால் பீதி அடைய தேவையில்லை. ஏனெனில் இந்தியா ஒரு சிறந்த அணியாக விளங்குகிறது அதேசமயம் முதல் ஆட்டத்தில் ஒரு நல்ல அணியுடன் தோற்று விட்டீர்கள் . இதனால் இந்திய அணி அடுத்த போட்டியில் வெற்றி பெறாது அல்லது கோப்பையை கைப்பற்றாது என்பது அர்த்தமல்ல. அடுத்த 4 போட்டிகளில் வெற்றி பெற்று , அரைஇறுதியிலும் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் .இதற்காக அணியில் அதிக மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை ” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.