Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா-தென் ஆப்பிரிக்கா தொடர் நடக்குமா….?அனுராக் தாக்கூர் பதில் ….!!!!

தென்னாபிரிக்காவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா -தென் ஆப்பிரிக்கா தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது .

தென்னாபிரிக்காவில் தற்போது உருமாறிய ஓமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.இந்த வீரியமிக்க புதிய வகை வைரஸுக்கு எதிராக தடுப்பூசியின் செயல் திறன் குறைவு என சொல்லப்படுகிறது அதோடு உலக சுகாதார அமைப்பும் இந்த புதிய வகை கொரோனா வைரஸுக்கு கவலைக்குரிய திரிபாக வரிசைப்படுத்தி உள்ளது. அதேபோல் இந்த புதிய வகை வைரசானது  ஹாங்காங், போட்ஸ்வானா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 60 பேருக்கு இந்த உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது .

இதனால் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளை சர்வதேச நாடுகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. இந்த நிலையில் இந்திய அணி அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது .தற்போது தென்னாப்பிரிக்காவில் பரவி வரும் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திட்டமிட்டபடி அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவில் தொடர் நடக்குமா  என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது. இதனிடையே மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரான அனுராக் தாக்கூர் இதுகுறித்து கூறும்போது” தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடர் ரத்தாகுமா என்பது இப்போதைக்கு கூற முடியாது .

ஆனால் இந்திய அணியை தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பும் முன் இந்திய கிரிக்கெட் வாரியம் மத்திய அரசிடம் ஆலோசித்து அனுமதி பெற்று அனுப்ப வேண்டும். ஏனெனில் தென்னாப்பிரிக்காவில் தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது .அதேசமயம் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு இந்திய அணியை விளையாட அனுப்புவது சரியான முடிவாக இருக்காது பிசிசிஐ  இது குறித்து ஆலோசிக்கும் போது .இது பற்றி விரிவாகப் பேசுவோம் “இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |