Categories
மாநில செய்திகள்

இந்தியாவுக்கு தமிழகம் தான் முன்மாதிரி மாநிலம்…. முதல்வர் ஸ்டாலின் பெருமித பேச்சு….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இன்றைக்கு நமது ஆட்சியின் இலக்காக அனைத்து துறையிலும் வளர்ச்சி என்பதை திராவிட மாடல் கோட்பாட்டாக கொண்டு உள்ளோம். அதற்கு அரசியல்-சமூகவியல் மட்டுமல்ல பொருளாதாரமும், தொழில் வளர்ச்சியும் உள்ளடங்கி இருக்கிறது. அதன்படி நூற்றாண்டு காணும் இந்த அமைப்பினை பாராட்டுவதை என்னுடைய கடமையாக நான் கருதுகிறேன். மேலும் இந்தியாவுக்கு பல்வேறு வகைகளில் தமிழ்நாடு தான் முன்மாதிரியான மாநிலமாக திகழ்கிறது. தொழிற்சங்க இயக்கம் என்பது இங்குதான் முதன்முதலாக உருவானது. பிரிட்டிஷார் அதிகப்படியான தொழிற்சாலைகளை இங்கு உருவாக்கினார்கள். அரசியல் உரிமையை மட்டுமல்ல, தொழிலாளர் உரிமையையும் தமிழ்நாடு கேட்டுப் போராடியது.

அதனை தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்த ஹார்வி ஆலையில் தொழிற்சங்கத்தை 1905-ஆம் ஆண்டு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்கள் உருவாக்கினார். அந்த மாவீரர் சிதம்பரனாருக்கு இன்று, நினைவு நாள். அத்தகைய முக்கியமான நாளில் நீங்கள் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதும் மிகமிக மிக பொருத்தமாக அமைந்திருக்கிறது. தூத்துக்குடி துறைமுகம், தூத்துக்குடி ஹார்வி ஆலை, சென்னை பக்கிங்காம் கர்நாடிக் ஆலை ஆகிய இடங்களில் தொழிலாளர் போராட்டங்கள் நடந்தது. இதனால், தொழிலாளர் ஒற்றுமை மட்டுமல்ல, தொழிலாளருக்கான சலுகைகள், சட்டங்கள் ஆகியவை உருவானது. இன்னொரு பக்கத்தில், தொழில் அதிபர்களும் தொழிலாளர்களுக்கு தேவையானவற்றை வழங்கவும், தங்களது தொழில்களை வளர்க்கவும் முயற்சிகள் எடுத்தார்கள். அவ்வாறு உருவானதுதான் தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பு ஆகும்.

இதனையடுத்து தொழில் முதலீட்டாளர்கள் ஒருங்கிணைந்து, தங்கள் தொழில்கள் சிறந்து விளங்கவும், தொழிலாளர்களுடன் ஒரு சுமுகமான சூழ்நிலையில் கொண்டு செல்லவும் EFSI அமைப்பு உருவாகியது. தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மற்றும் 15 பெரிய தொழில்துறை சங்கங்கள் கொண்ட 730 நிறுவன உறுப்பினர்களைக் கொண்டு இந்தக் கூட்டமைப்பு முதலில் தொடங்கப்பட்டுள்ளது. இன்று 10 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்த தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பு, சிறப்பாகச் செயல்பட்டு, தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கி வருவது பாராட்டுக்குரியது. திமுகஅரசு பொறுப்பேற்ற பின்னர், தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக, 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற முன்னெடுப்புகளை எடுத்து வருவது உங்களுக்கு நன்றாக தெரியும். தமிழகத்தில் புதிய தொழில்கள் ஏராளமாக இந்த 15 மாத காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது
இதனைத்தொடர்ந்து தமிழக எல்லையைத் தாண்டி பல்வேறு மாநிலத்தில் இருந்து வந்து நிறுவனங்களைத் தொடங்குகிறார்கள். அதன்படி தொழிலதிபர்கள் – தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அதனைப்போல தமிழகத்தில்  அமைப்புசார்ந்த தொழிலாளர்களின் நலன் கருதி இந்த துறையில் தமிழகம் தொழிலாளர் நல வாரியம் மூலம் கல்வி, திருமணம், இறப்பு இழப்பீட்டுத் தொகை, மூக்குக் கண்ணாடி வழங்குதல், ஓய்வு இல்ல வசதி ஆகிய திட்டங்களை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த கூட்டமைப்பு அனைத்து முக்கிய தொழிற்சாலைகளுடன் சிறந்த உறவை பேணிக்காத்து வருகிறது. மேலும் தொழில் துறை மற்றும் பொதுவான முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள், தொழிலாளர் நலன் குறித்த விவகாரங்களில், தொழிற்சங்கத்துடன் தொடர்பு கொண்டு செயல்பட்டு வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
அதற்காக உங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன். தொழில்துறையினருக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே சமரச முறையின் மூலம் சுமூகமான உறவை ஏற்படுத்த தொழிலாளர் துறையானது நடவடிக்கை எடுத்து வருகிறது. உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் தொழில்சார் வல்லுநர்கள் கொண்ட குழு அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் தலைசிறந்த இடத்தை தமிழக தொழில் துறை பெற வேண்டும். அதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் அரசு உங்களுக்கு வழங்கும். தொழிலை மட்டுமல்ல, தொழிலாளர்களையும் வளர்க்கும் கடமையும், பொறுப்பும் உங்களுக்கு உண்டு. அரசு தொழிலதிபர்கள், தொழிலாளர் ஆகிய முத்ததரப்பும் கைகோர்த்தால் தமிழகத்தின் வளர்ச்சி என்பது எப்போதும் இல்லாத அளவுக்கு உயரும். இதுவே இந்த அரசினுடைய குறிக்கோள் இவற்றை நோக்கியை நாம் பயணம் செய்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |