இந்தியா மற்றும் தென்கொரியாவின் தடுப்பூசிகளுக்கு சர்வதேச அளவில் கூடுதல் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் தென்கொரியா ஆகிய இரண்டு நாடுகளும் கொரோனாவுக்கு எதிராக தயாரித்த தடுப்பூசிகளை உலகில் உள்ள அனைத்து நாடுகளும் அவசரகால பயன்பாட்டிற்காக மக்களுக்கு செலுத்தலாம் என்று WHO அங்கீகாரம் கொடுத்துள்ளது. தென்கொரியாவில் அஸ்ட்ராஜெனேகா -எஸ்.கே பயோ நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக தயாரித்த தடுப்பு ஊசி மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா தயாரித்த கோவிஷீல்டு என்ற இரண்டு தடுப்பூசிகளும் சர்வதேச அளவில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
WHO -வின் Covax Facility என்ற திட்டத்தின் மூலம் உலகில் உள்ள அனைத்து ஏழை நாடுகளுக்கும் தடுப்பூசி சரியான முறையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த இரண்டு நிறுவனங்கள் தயாரித்த தடுப்பு மருந்துகளுக்கு கூடுதலாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தடுப்பூசிகளும் 63.09% செயல்திறனை கொண்டிருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு ஏற்றது என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகள் நோய் தடுப்பு நிபுணர்களின் ஆலோசனை குழு(SAGE) மதிப்பாய்வு செய்த பிறகு மக்களுக்கு செலுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு இந்த இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தலாம் என்று அந்த குழு பரிந்துரைத்துள்ளது