இந்தியா திரும்பிய சந்தோஷத்தில் கட்டி அணைத்து முத்தமிடும் குழந்தையின் வீடியோ காட்சி வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனால் அந்நாட்டில் உள்ள மக்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்களை மீட்பதற்காக இந்திய விமானப்படை விமானத்தை அங்கு அனுப்பியது. அதில் இந்தியர்களுடன் இணைந்து 168 ஆப்கான் மக்களும் இந்தியா வந்தடைந்துள்ளனர்.
https://twitter.com/i/status/1429324388420112384
அதில் இந்தியா திரும்பிய குழந்தைகளில் ஒன்று அங்கிருந்து தப்பித்து வந்த மகிழ்ச்சியில் தனது தங்கையை கட்டியணைத்து முத்தம் கொடுக்கும் காட்சியானது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. குறிப்பாக ஆப்கானில் இருக்கும் பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் தாங்கள் பாதுகாப்பாக இந்திய மண்ணிற்கு திரும்பியதை நினைத்து இரண்டு குழந்தைகளும் அன்பை பரிமாறிக் கொண்டனர்.