டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த உலக கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டுவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் பாகிஸ்தான் நடிகை ஷேகர் ஷின்வாரி இந்திய அணி தோல்வி அடைய வேண்டும் என்று தொடர்ந்து தனது விருப்பத்தை பதிவிட்டு வருகிறார். இதற்கிடையே வருகின்ற 6ஆம் தேதி இந்தியா-ஜிமாபாப்வே இடையே போட்டி நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஷின்வாரி தனது டுவிட்டரில், இந்தியா-ஜிம்பாப்வே இடையேயான கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றால் அந்த நாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்து கொள்வேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இதற்கு முன்னால் பலமுறை ஷின்வாரியின் கணிப்புகள் தவறாக போனதை ரிப்போர்ட் செய்து கலாய்த்து வருகின்றனர்..