Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இந்தியாவிலே முதலிடம்…! ”அடிச்சு தூக்கி மாஸ்” காட்டிய தமிழகம் …!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் இன்று ஒரே நாளில் 178 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக அளவில் 25 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இதன் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்ட்டவரின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையியும் அதிகரித்து வந்ததால் நாடுமுழுவதும் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்குவ கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டத்தில் 600க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 4,666 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 572 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்தபடியாக கொரோனா பாதிப்பில் 5ஆம்இடத்தில் இருந்த தமிழகம் அதிகமானோரை குணப்படுத்தியதில் 2ஆம் இடத்தில் இருக்கின்றது. தமிழகத்தில் 1520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 457 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்ட தகவலில் தமிழகத்தில் கூடுதலாக 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பாதித்தவர்கள் எண்ணிக்கை 1596 ஆக உயர்ந்தது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து அதிர்ச்சி அளித்தாலும் இன்று ஒரே நாளில் 178 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் மொத்த எண்ணிக்கை 635ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவிலில் அதிகமான கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியதில் தமிழகம் தான் அதிகம். அதிகமானவர்களை குணப்படுத்தியதாக முதலீடத்தில் இருந்து மஹாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி தமிழகம் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. கொரோனா தடுப்பு நடவ்டிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடு மிகவும் ஆக்கபூர்வமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |