இந்தியாவில் கொரோனா வைரஸால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்.,14ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனோவை வெல்வோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தேவையான நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து அதிபர் ட்ரம்ப் இந்தியாவின் செயலை பாராட்டி ட்வீட் செய்திருந்தார். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கருத்தை முழுவதுமாக வரவேற்கிறேன்.
இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு முன்பைவிட வலுப்பெற்றுள்ளது என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். கொரோனோவுக்கு எதிரான போராடத்திற்கு இந்தியா அனைத்து விதத்திலும் உதவும். அனைவரும் ஒன்றாக இணைந்து கொரோனாவை வெல்வோம் இன்றும் இதுபோன்ற சூழ்நிலைகள் நட்பை மேலும் பலப்படுத்தும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். ஊரடங்கு நீட்டிப்பது குறித்து டெல்லியில் பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.