போதைமருந்து கடத்தி சென்ற கார் ஒன்று இந்திய வம்சாவளி பெண் மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பிரிட்டனின் ஹன்ஸ்ஒர்த் என்ற இடத்தில் இந்திய வம்சாவளியினரான 62 வயது தக்க கிருஷ்ணதேவி என்ற பெண்மணி சாலையை கடக்க முயன்ற போது வேகமாக வந்த கார் அவரை மோதியுள்ளது. கார் மோதியதில் தூக்கி எறியப்பட்ட அப்பெண்மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து 43 வயதான முஹம்மது இஸ்ஃபாக் என்பவர் போதை மருந்தை கடத்தி செல்லும் போது தன்னை யாரோ பின் தொடர்வதாக எண்ணி காரை வேகமாக ஓட்டியுள்ளார். இதனால் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் அப்பெண்மணியின் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவரின் மகன் விஜய் கூறியுள்ளார் .மேலும் குற்றவாளியான இஸ்ஃபாக்கு ஆறு ஆண்டுகள் 3 மாதங்கள் சிறை தண்டனையும் 10 ஆண்டுகள் வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.