இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர் விமான விபத்தில் உயிரிழந்துள்ளார்.
அமெரிக்க நாட்டில் சிறியவகை விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவா் உட்பட 2 போ் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அமெரிக்க ஊடகங்களை மேற்கோள் காட்டி பிரபல செய்தி நிறுவனம் கூரியதாவது, “சுகதா தாஸ் என்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் ஆவர். அரிஸோனா மாகாணத்தின் யூமா மண்டல மருத்துவ மையத்தில் இருதய நோய் நிபுணராக சுகதா தாஸ் பணியாற்றி வந்தார்.
கடந்த திங்கட்கிழமை அன்று சுகதா தாஸ் தனக்குச் சொந்தமான சிறியவகை விமானத்தில் பயணம் செய்த போது திடீரென ஏற்பட்ட கோளாறால் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சுகதா தாஸ் உயிரிழந்தார். மேலும் விமானம் விழுந்து நொறுங்கியதில் இரண்டு கட்டடங்கள் தீப்பற்றி எறிந்தன. அதுமட்டுமின்றி இந்த விபத்தில் தரையிலிருந்த மேலும் ஒரு நபர் பலியாகியுள்ளார்.
இதனை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரா்கள் போராடி தீயை அணைத்தனர். குறிப்பாக கலிபோர்னியா மாகாணத்தின் சாண்டீ பகுதியில் உள்ள சாண்டனா உயா்நிலைப் பள்ளி அருகே இந்த விமானம் விபத்துக்குள்ளாகி உள்ளது” என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.