இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு பிரிட்டனின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
அமிகா ஜார்ஜ் (வயது 21) என்ற இளம்பெண் தன் குடும்பத்தினருடன் பிரிட்டனில் வசித்து வருகிறார். இந்திய வம்சாவளியான இந்தப் பெண் பிரிட்டனில் வாழ்ந்து வந்தாலும் அடிக்கடி தன் சொந்த ஊரான கேரளாவிற்கு சென்று வருவார். இவர் 17 வயதில் பள்ளி படிப்பு படித்துக்கொண்டிருக்கும்போது சக மாணவி ஒருவர் மாதவிடாய் காரணமாக பள்ளிக்கு வர முடியாமல் இருந்தார்.
அந்த மாணவியின் ஏழ்மை கதையை கேட்ட அமிகா ஒரு முடிவெடுத்தார் .அது தன்னுடன் பயிலும் சக மாணவிகள் அனைவருக்கும் இலவசமாக நாப்கின் வழங்க வேண்டும் என்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார் . இதனால் இவரது பிரச்சாரத்தை கௌரவிக்கும் வகையில் பிரிட்டனின் உயரிய விருதான MBE (Member of the Most Excellent Order of the British Empire) விருது அமிகாவுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது . அத்துடன் இந்த ஆண்டில் இந்த உயரிய விருதை பெரும் மிகக்குறைந்த வயதுடையவர் அமிகா என்பது குறிப்பிடத்தக்கது.