Categories
உலக செய்திகள்

இந்தியா விரும்பும் நாட்டிலிருந்து எண்ணெய்யை வாங்குமா….? பிரபல நாட்டு மத்திய மந்திரி பேச்சு….!!!!

இந்தியா எந்த நாட்டிடமிருந்து தேவையான எண்ணெய்யை வாங்கும் என அமெரிக்கா மத்திய பெட்ரோலியம் துறை மந்திரி பேசியுள்ளார்.

அமெரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி அந்நாட்டின் பெட்ரோலிய துறை மந்திரி ஜென்னிபர் கிரான்ஹோம் மற்றும் ஜோ பைடன் நிர்வாகத்தில் உள்ள பிற உயர்மட்ட அதிகாரிகளையும் நேரில் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து, வாஷிங்டன் நகரில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவரிடம், எரிபொருள் வாங்குவதில் ரஷ்யாவை சார்ந்து இருப்பதற்கு எதிராக இந்தியாவுக்கு அழுத்தம் அளிக்கப்பட்டதா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு புரி நேரடியான முறையில் அளித்த பதிலில், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய்யை வாங்குவது நிறுத்தப்பட வேண்டும் என யாரேனும் என்னிடம் கூறினார்களா? என்று கேள்வி எழுப்பப்படுகின்றது. அ

அதற்கான பதில் இல்லை என்பதே அதிகளவு நுகர்வோர்களை கொண்டுள்ள நாடாக இந்தியா உள்ளது. தனக்கு தேவையான எண்ணெய்யை எந்தவொரு நாட்டிடமிருந்தும் இந்தியா வாங்கும். அதனால், இது குறித்து விவாதம் நடத்த முடியாது என கூறியுள்ளார். உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து, ரஷ்யாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை உள்ளிட்டவற்றை பிறப்பித்து அந்நாட்டுக்கு நெருக்கடி அளித்தது. இதன் ஒரு பகுதியாக அந்நாட்டுடனான இந்தியாவின் பொருளாதார உறவுக்கும் நெருக்கடி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்தியாவுடனான பேச்சுவார்த்தையின்போது, எண்ணெய் கொள்முதலில் ரஷ்யாவுடனான பொருளாதார தொடர்பை நிறுத்தி கொள்ளும்படி அமெரிக்கா பெருமளவில் வலியுறுத்தியுள்ளது என சில ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்துள்ளன.

 

Categories

Tech |