இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியது.இதில் இந்திய அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும், டி20 தொடரை 3-0 என்ற கணக்கிலும் முழுமையாக கைப்பற்றியது.இதனிடையே இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்நிலையில் காயம் காரணமாக இலங்கை அணிக்கெதிரான டி20 தொடரிலிருந்து சூர்யகுமார் யாதவ் விலகியுள்ளார் என பிசிசிஐ அறிவித்துள்ளது .ஏற்கனவே தீபக் சாஹர் காயம் காரணமாக இலங்கை அணிக்கெதிரான தொடரில் இருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.