இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டி இன்று மாலை நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஐந்தாவது டெஸ்ட் போட்டியை ரத்து செய்துள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பிசிசிஐ உடன் ஆலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.
இந்நிலையில் இந்தியஅணியில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பே 5வது டெஸ்ட் போட்டியை ரத்து செய்யும் சூழ்நிலைக்கு தள்ளியதாக பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. டெஸ்ட் நடத்த இங்கிலாந்து வாரியத்திடம் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறியுள்ளது. அதனால் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடைபெறவிருந்த 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.