Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS நியூசிலாந்து 2-வது டெஸ்ட் போட்டி ….! நாளை தொடங்குகிறது ….!!!

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான  2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதையடுத்து இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது .இதனிடையே இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ளது. அதோடு முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவற விட்டது. இதனால் 2-வது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்தை இந்திய அணி உள்ளது.

அதே சமயம் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருந்த கேப்டன் விராட்கோலி நாளை நடைபெற உள்ள 2-வது டெஸ்ட் போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்புகிறார் .மேலும் அவருடைய வருகை அணிக்கு பேட்டிங்கில் கூடுதல் பலமளிக்கும் .அதேசமயம் முதல் டெஸ்டில் அறிமுக வீரராக களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் முதல் இன்னிங்சில் சதம் மற்றும் 2-வது இன்னிங்சில் அரை சதம் அடித்து அசத்தினார் .இதனால்  அவர் அடுத்த டெஸ்ட் போட்டியில் அணியிலிருந்து நீக்குவதற்கான வாய்ப்பு குறைவாக காணப்படுகிறது. அணியில் சீனியர் வீரரான ரஹானே, புஜாரா மற்றும் மயங்க் அகர்வால் ஆகிய மூவரில் யாரேனும் ஒருவர் அணியிலிருந்து நீக்கப்படலாம்.

இதையடுத்து நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களான  டாம் லாதம், வில் யங் இருவரும் நல்ல பார்மில் உள்ளனர் .அடுத்ததாக கேப்டன் கேன் வில்லியம்சன்,  ரோஸ் டெய்லர் ஆகியோரும் பேட்டிங்கில் சிறப்பாக உள்ளனர் .அதேபோல் பவுலிங்கில் சவுத்தி, ஜேமிசன் அஜாஸ் படேல்  ஆகியோர் மிரட்டி வருகின்றனர். இதுவரை இரு அணிகளும் 61  டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளது .இதில் இந்திய அணி 21 டெஸ்ட் போட்டியிலும், நியூசிலாந்து அணி 13 டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளத்து. அதோடு 27 டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது .இரு அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

Categories

Tech |