Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS நியூசிலாந்து தொடர் …. இந்தியா வந்தடைந்தது நியூசிலாந்து அணி…..!!!

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் நிறைவடைந்தது .இதில் நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது .இதனிடையே இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

இத்தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து அணி நேற்று ஜெய்ப்பூர் வருகை தந்துள்ளது மேலும் டி 20 உலக கோப்பை தொடரில் ஏற்கனவே பயோ – பபுள் பாதுகாப்பு வளையத்தில் வீரர்கள் இருந்ததால் அவர்கள் தனி விமானம் மூலமாக ஜெய்ப்பூருக்கு வந்துள்ளனர். இதில் நடப்பு          உலக கோப்பை தொடரில் அரையிறுதிக்குள் நுழைய முடியாமல் தகுதிச்சுற்று வெளியேறிய இந்திய அணி, உலக கோப்பையில் 2-வது இடம் பிடித்த நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. அதோடு தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும்.

Categories

Tech |