நியூசிலாந்து அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
டி20 உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நியூசிலாந்து அணி மூன்று டி20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதனிடையே நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
#TeamIndia squad for NZ Tests:
A Rahane (C), C Pujara (VC), KL Rahul, M Agarwal, S Gill, S Iyer, W Saha (WK), KS Bharat (WK), R Jadeja, R Ashwin, A Patel, J Yadav, I Sharma, U Yadav, Md Siraj, P Krishna
*Virat Kohli will join the squad for the 2nd Test and will lead the team. pic.twitter.com/FqU7xdHpjQ
— BCCI (@BCCI) November 12, 2021
இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா,ரிஷப் பண்ட் , முகமது ஷமி , ஷர்துல் தாகூர் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.அதேசமயம் முதல் போட்டியில் விராட் கோலி பங்கேற்க மாட்டார் என்பதால் போட்டிக்கு அஜிங்கியா ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.இதில் முதல் போட்டி நவம்பர் 25-ஆம் தேதியும் , 2-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 3-ஆம் தேதியும் நடைபெறுகிறது.
இந்திய அணி:
அஜிங்க்யா ரஹானே (கேப்டன்),கேஎல் ராகுல், மயங்க் அகர்வால்,புஜாரா (துணை கேப்டன்), ஷுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், விருத்திமான் சாஹா, கேஎஸ் பாரத், ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஷ்வின், அக்சர் படேல், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.