இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் மோதுவதை அனைவரும் விரும்புவார்கள் என சேன் வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார்..
2022 டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்ற பிறகு, 2007 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி போல மீண்டும் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. 2 பரம எதிரிகளும் அக்டோபர் 23 அன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையின் தொடக்க சூப்பர் 12 சுற்று போட்டியில் மோதினர்.
விராட் கோலி வரலாற்றில் மிகச்சிறந்த டி20 ஆட்டங்களில் ஒன்றை இந்த போட்டியில்ஆடினார். அவ்வளவு எளிதில் விராட் கோலியின் ஆட்டத்தை மறந்துவிட மாட்டார்கள்.. இந்தியா பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. மில்லியன் கணக்கான ரசிகர்கள் தங்கள் தொலைக்காட்சிகளில் இந்த போட்டியை பார்த்தனர், இந்த போட்டி ரசிகர்களின் இதயத்தை நிறுத்தும் அளவுக்கு திக் திக் என பரபரப்பாக இருந்தது. ஆனால் கடைசியில் கிங் கோலி தனி ஒருவனாக அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார்.
தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளதால் மீண்டும் இரு அணியும் இறுதிப் போட்டியில் மோதும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். அதேபோல ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ஷேம் வாட்சன், டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் மோதலை எதிர்நோக்குகிறார், இதை “எல்லோரும் பார்க்க விரும்புவார்கள்” என்று அவர் நம்புகிறார்.
இதுகுறித்து சேன் வாட்சன் கூறியதாவது, “எல்லோரும் பாகிஸ்தானையும் இந்தியாவையும் இறுதிப் போட்டியில் பார்க்க விரும்புவார்கள். துரதிர்ஷ்டவசமாக MCG இல் நடந்த முதல் (சூப்பர் 12) ஆட்டத்தை நான் தவறவிட்டேன், ஏனெனில் நான் முன்பு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையேயான ஆட்டத்தில் வர்ணனை செய்தேன்,” ஆனால் எல்லா அறிக்கைகளிலிருந்தும், அந்த போட்டியை சென்ற அனைத்து மக்களும் இது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று என்றும், டிவியில் பார்க்கக்கூடிய ஒரு அற்புதமான கேம் என்றும் கூறினார்.
மேலும் இந்த போட்டியை நான் டிவியில் பார்த்து மகிழ்ந்தேன். அவர்கள் 2007 இல் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடினர், எனவே ரசிகர்கள் அனைவரும் அதை மீண்டும் பார்க்க விரும்புவார்கள், ”என்று அவர் கூறினார். அதாவது சேன் வாட்சன் இந்தியா – பாகிஸ்தான் இறுதிப்போட்டியில் விளையாட வேண்டும் என்று நினைக்கிறார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தோல்வியைத் தவிர மற்ற அனைத்து சூப்பர் 12 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அவர்கள்8 எட்டு புள்ளிகளுடன் குழு 2 இல் முதலிடத்தைப் பிடித்தனர் மற்றும் அவர்களின் வரலாற்றில் 4ஆவது முறையாக நாக் அவுட் கட்டத்தை அடைந்தனர்.
குரூப் 2 இலிருந்து இந்தியாவும், பாகிஸ்தானும் அரையிறுதிக்கு தகுதி பெற்றன, அதே சமயம் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் குரூப் 1 இலிருந்து தகுதி பெற்றன. மென் இன் ப்ளூ வியாழன் அன்று நவம்பர் 10ஆம் தேதி அடிலெய்டு ஓவலில் நடக்கும் அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. முன்னதாக நவம்பர் 9 புதன்கிழமை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் மற்றொரு அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.