இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடக்கும் என்றாலே உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பார்கள். உள்நாட்டு அரசியல் விவகாரங்கள் காரணமாக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இரண்டு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர் தடைபட்டது. ஐசிசி நடத்தும் இந்த தொடர்களில் மட்டுமே இந்த இரண்டு அணிகளும் மோதி வருகின்றன. கடைசியாக 2021 ஆம் வருடம் டி20 உலக கோப்பையில் இந்த இரண்டு அணிகளும் மோதினர்.
இதனை அடுத்து அடுத்ததாக வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி ஆசிய கோப்பை தொடரில் இந்த இரண்டு அணிகளும் மோதுகின்றன. இரு அணி வீரர்களுடைய பட்டியலும் அறிவிக்கப்பட்டது. இதனால் இரண்டு அணி வீரர்களும் துபாய் சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சூழலில் மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் பாகிஸ்தானிலேயே பிறந்து இந்திய அணிக்காக விளையாடிய சில கிரிக்கெட் வீரர்களும் இருக்கிறார்கள். அவர்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அப்துல் ஹபீஸ் காதர்: லாகூரில் பிறந்த இவர் இந்திய அணிக்காக மூன்று டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார். பின்னர் பாகிஸ்தானுக்கு குடி பெயர்ந்து பாகிஸ்தான் அணிக்கு விளையாடிய இவர் 1952 ஆம் வருடம் பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஆகவும் உருவெடுத்துள்ளார். இவர் பாகிஸ்தான் அணிக்கு முதல் கேப்டன் ஆவார். 1958 ஆம் வருடம் தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய இவர் அதன் பிறகு இந்தியாவில் சிறிது காலமும் பாகிஸ்தானில் சில காலமும் வாழ்ந்து வந்தார் என்பது கூறப்படுகிறது.
குல் முகமது: இவர் பாகிஸ்தானில் பிறந்தவர் இந்திய அணிக்கு விளையாடிய முதல் வீரர். அவர் இந்திய அணிக்காக 8 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ளார். 1956 ஆம் வருடம் பாகிஸ்தான் அணியில் அறிமுகமான இவர் 9 டெஸ்ட் போட்டிகளை பாகிஸ்தான் அணிக்காக விளையாடி உள்ளார்.
அமீர் இலாஹி: லாகூரில் பிறந்த இவர் 1947 ஆம் வருடம் இந்திய அணிக்காக விளையாட அறிமுகமானார். இவர் இந்திய அணிக்காக எத்தனை போட்டிகளில் விளையாடினார் என்பது தெரியவில்லை. பிறகு பாகிஸ்தானுக்கு இவருடைய குடும்பம் குடிபெயர்ந்தது. பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமான இவர் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். கடைசியாக 1952 ஆம் வருடம் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.