ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கும் ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அமீரகத்தில் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வருகின்ற ஆகஸ்ட் 28ஆம் தேதி துபாயில் மோதுகின்றன. இந்த இரண்டு அணிகளும் இறுதியாக கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் மோதின. அதில் இந்தியா தோல்வியை சந்தித்தது. பொதுவாக உலக கோப்பையில் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையாவது இரண்டு அணிகளும் மோதிக்கொண்டாலும் ஆசியக் கோப்பையில் 5 வருடங்களுக்கு பிறகு தற்போது தான் இரண்டு அணிகளும் ஓதுகின்றன. எனவே ஆசிய கோப்பையில் இரண்டு அணிகளும் ஊதிய கடைசி ஐந்து போட்டிகளின் வரலாறு குறிப்பிடத்தக்கது.
அதன்படி கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் ஆசிய கோப்பை தொடரில் கம்பீர் மற்றும் கம்ரான் அக்மல் கடும் சண்டையிட்டனர். 268 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 262 ரன்கள் எடுத்து தடுமாறியது. கடைசி இரண்டு பந்தில் மூன்று ரன்கள் தேவை என்ற சூழலில் ஹர்பஜன் சிங் சிக்ஸரை விளாசி த்ரில்லரான வெற்றியை பெற்று தந்தார்.
அதன் பிறகு கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் சச்சின் டெண்டுல்கரின் கடைசி ஆசிய கோப்பை என்று கூறலாம். 331 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்த இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் 52 ரன்கள் எடுத்தார். இருந்தாலும் அவரால் சதம் அடிக்க முடியவில்லை. இருந்தாலும் சச்சின் கடைசி போட்டியை சிறப்பாக அமைத்து தர வேண்டும் என்ற நோக்கத்தில் விராட் கோலி 142 பந்துகளில் 183 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு வலுவாக இருந்தார்.
அதன் பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் சாகித் அதிரடியால் இந்திய அணி திணறியது. 245 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில் விக்கெட்டுகள் சீரான இடைவேளையில் சரிந்தன.அதில் இந்தியாவின் வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் ஜடேஜா மற்றும் அஸ்வினின் வந்து வீச்சை பொளந்து கட்ட பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
அடுத்ததாக கடந்த 2016 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை மிகவும் முக்கியமானது. இந்தியாவின் மௌலிங்கில் வெறும் 84 ரன்கள் மட்டுமே குவித்த பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்தது. முகமது அமீரின் பௌலிங் ரோகித் சர்மா மற்றும் சுரேஷ் ரெய்னா என தா வீராங்கனைகள் அனைவரும் சரிந்தன. இருந்தாலும் விராட் கோலி நிதானமாக ஆடி இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.
இறுதியாக கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இந்தியா சுலபமான வெற்றியை பெற்றது. 238 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி எவ்வித சிரமமும் இல்லாமல் சீரான வேகத்தில் ரண்களை உயர்த்தி அபார வெற்றி பெற்றது.
இதனிடையே கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கழித்து ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதிக்கொள்வது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.