இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடங்குகிறது.
இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியாவும், 2-வது போட்டியில் தென்னாபிரிக்கா அணியும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது .
இந்நிலையில் இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் நடைபெறுகிறது. எனவே இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.