Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS தென் ஆப்பிரிக்கா போட்டி இடங்கள் மாற்றமா ….? பிசிசிஐ முடிவு …!!!

இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இதில் டி20 தொடர் வருகிற 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது.இதைதொடர்ந்து டெஸ்ட் போட்டி  மார்ச் 4-ம் தேதி முதல் தொடங்கி 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் பிறகு வீரர்கள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பார்கள்.ஐபிஎல் தொடருக்கு பிறகு தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.அதேசமயம் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20  போட்டிக்கான இடம் மற்றும் தேதியை ஏற்கனவே பிசிசிஐ அறிவித்து இருந்தது.
இந்நிலையில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா டி20  போட்டிக்கான இடங்கள் மாற்றம் செய்யப்படலாம் என தெரிகிறது. கொரோனா பரவல் மற்றும் பருவநிலை காரணமாக இப்போட்டிக்கான இடங்களை மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதேசமயம் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மட்டும் போட்டியை நடந்த பிசிசிஐ  ஆலோசித்து வருகிறது.இதுதொடர்பாக வருகிற 2-ம் தேதி நடைபெறும் பிசிசிஐ கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தெரிகிறது. மேலும் சி.கே.நாயுடு டிராபி, மகளிருக்கான டி20 கிரிக்கெட் லீக் ஆகியவை குறித்தும் முடிவு செய்யப்படுகிறது.

Categories

Tech |